'நாதஸ்வரம்' சீரியல் நடிகையின் கணவர் திடீரென மரணம்.. திருமணமான ஒரே வருடத்தில் ஏற்பட்ட சோகம்..!

  • IndiaGlitz, [Thursday,August 03 2023]

’நாதஸ்வரம்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

’நாதஸ்வரம்’ சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. இவர் அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று அரவிந்த் சேகர் திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு சின்னத்திரை உலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ருதி - அரவிந்த் இருவருக்கும் கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது. இந்த ஆண்டு அவர்கள் தல தீபாவளி கொண்டாட இருக்கும் நிலையில் திடீரென இந்த சோகம் ஏற்பட்டுள்ளது அவரது குடும்பத்தினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரவிந்த் சேகர் உடல் மீது அக்கறை கொண்டவர் என்பதும், மிஸ்டர் தமிழ்நாடு 2022 பட்டமும் அவருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு கொண்டிருந்தனர் என்பதும் திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய ஸ்ருதி பிசினஸ் செய்து கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.