ரஹானேவை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்… கூடவே வைரலாகும் ஸ்மைலி போட்ட ஜெர்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியைப் பார்த்து பல முன்னணி வீரர்களும் ஆச்சர்யம் அடைந்து உள்ளனர். காரணம் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தி கப்பா மைதானத்தில் 33 ஆண்டுகால வரலாற்றை மாற்றி இருக்கிறது. இதனால் பார்டர் கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் தக்க வைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்து உள்ளது.
பிரின்ஸ்பனில் நடைபெற்ற இதற்கான கடைசிப் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரஹானே மிகவும் சிறப்பாக செயல்பட்டார். 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை டிரா செய்வதற்கும் இந்திய அணி வீரர்களுக்கு வழிகாட்டினார். மேலும் ஆஸ்திரேலிய களத்தில் இந்திய அணி வீரர்கள் எதிர்கொண்ட அழுத்ததையும் திறமையாகச் சமாளித்தார்.
இந்நிலையில் 3 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்களின் நடவடிக்கைகள் முகம் சுளிக்கும் வகையறாவாகவே இருந்தது. ஆனால் இதையெல்லாம் சிறிதும் கண்டு கொள்ளாத இந்திய கேப்டன் ரஹானே கடைசி போட்டி முடிந்ததும் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லைனுக்கு இந்திய வீரர்கள் கையெழுத்து இட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினார். காரணம் நாதன் லைனுக்கு அந்தப் போட்டி 100 ஆவது போட்டியாக அமைந்தது. அவருக்கு இது வெற்றிப் போட்டியாக இல்லாவிட்டாலும் 100 ஆவது போட்டியை நினைவுகூரும் வகையில் ரஹானே இந்திய அணியின் ஜெர்சியை பரிசாக வழங்கி இருந்தார்.
இதைச் சற்றும் எதிர்பாராத நாதன் லைன் பெருமை பொங்க இந்திய வீரர்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார். மேலும் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 100 ஆவது போட்டியைக் குறித்து கருத்து பதிவிட்டு உள்ள நாதன் லைன் இந்திய வீரர்களுக்கு நன்றியைத் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த ஜெர்சி என்னுடைய கலெக்சனில் பிரதான இடம் பிடிக்கும் என்று கூறி பரிசாகப் பெற்ற ஜெர்சியையும் வெளியிட்டு இருந்தார்.
அந்த ஜெர்சி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் கடும் வைரலாகி வருகிறது. காரணம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து இந்திய வீரர்களும் அந்த ஜெர்சியில் கையெழுத்து உள்ளனர். அதில் ரிஷப் பந்தின் விளையாட்டுத் தனம் ரசிகர்கள் மத்தியில் கடும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. போட்டி நேரத்திலும் பாட்டுப்பாடி குறும்புத் தனத்துடன் செயல்படும் பந்த் இந்த ஜெர்சியிலும் ஸ்மைலி போட்டு கையெழுத்திட்டு இருக்கிறார். இதனால் ரசிகர்கள் “இந்த மனுஷன் எப்படி எல்லா நேரத்திலும் படு ஜாலியா இருக்கிறார்” என்ற கமெண்ட் பதிவிட்டு புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
The Indian team had presented Nathan Lyon with the jersey to congratulate him for playing his 100th Test for Australia. The presentation was made at the Brisbane Test match! ????#INDvAUS #AUSvIND pic.twitter.com/ZBVkLjdlNX
— Mohandas Menon (@mohanstatsman) January 27, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout