ரஹானேவை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்… கூடவே வைரலாகும் ஸ்மைலி போட்ட ஜெர்சி!

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியைப் பார்த்து பல முன்னணி வீரர்களும் ஆச்சர்யம் அடைந்து உள்ளனர். காரணம் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தி கப்பா மைதானத்தில் 33 ஆண்டுகால வரலாற்றை மாற்றி இருக்கிறது. இதனால் பார்டர் கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் தக்க வைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்து உள்ளது.

பிரின்ஸ்பனில் நடைபெற்ற இதற்கான கடைசிப் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரஹானே மிகவும் சிறப்பாக செயல்பட்டார். 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை டிரா செய்வதற்கும் இந்திய அணி வீரர்களுக்கு வழிகாட்டினார். மேலும் ஆஸ்திரேலிய களத்தில் இந்திய அணி வீரர்கள் எதிர்கொண்ட அழுத்ததையும் திறமையாகச் சமாளித்தார்.

இந்நிலையில் 3 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்களின் நடவடிக்கைகள் முகம் சுளிக்கும் வகையறாவாகவே இருந்தது. ஆனால் இதையெல்லாம் சிறிதும் கண்டு கொள்ளாத இந்திய கேப்டன் ரஹானே கடைசி போட்டி முடிந்ததும் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லைனுக்கு இந்திய வீரர்கள் கையெழுத்து இட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினார். காரணம் நாதன் லைனுக்கு அந்தப் போட்டி 100 ஆவது போட்டியாக அமைந்தது. அவருக்கு இது வெற்றிப் போட்டியாக இல்லாவிட்டாலும் 100 ஆவது போட்டியை நினைவுகூரும் வகையில் ரஹானே இந்திய அணியின் ஜெர்சியை பரிசாக வழங்கி இருந்தார்.

இதைச் சற்றும் எதிர்பாராத நாதன் லைன் பெருமை பொங்க இந்திய வீரர்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார். மேலும் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 100 ஆவது போட்டியைக் குறித்து கருத்து பதிவிட்டு உள்ள நாதன் லைன் இந்திய வீரர்களுக்கு நன்றியைத் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த ஜெர்சி என்னுடைய கலெக்சனில் பிரதான இடம் பிடிக்கும் என்று கூறி பரிசாகப் பெற்ற ஜெர்சியையும் வெளியிட்டு இருந்தார்.

அந்த ஜெர்சி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் கடும் வைரலாகி வருகிறது. காரணம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து இந்திய வீரர்களும் அந்த ஜெர்சியில் கையெழுத்து உள்ளனர். அதில் ரிஷப் பந்தின் விளையாட்டுத் தனம் ரசிகர்கள் மத்தியில் கடும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. போட்டி நேரத்திலும்  பாட்டுப்பாடி குறும்புத் தனத்துடன் செயல்படும் பந்த் இந்த ஜெர்சியிலும் ஸ்மைலி போட்டு கையெழுத்திட்டு இருக்கிறார். இதனால் ரசிகர்கள் “இந்த மனுஷன் எப்படி எல்லா நேரத்திலும் படு ஜாலியா இருக்கிறார்” என்ற கமெண்ட் பதிவிட்டு புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

The Indian team had presented Nathan Lyon with the jersey to congratulate him for playing his 100th Test for Australia. The presentation was made at the Brisbane Test match! ????#INDvAUS #AUSvIND pic.twitter.com/ZBVkLjdlNX

— Mohandas Menon (@mohanstatsman) January 27, 2021

More News

அதிமுக தொண்டர்களைப் திடீரென பாராட்டிய கவிப்பேரரசு வைரமுத்து: ஏன் தெரியுமா?

முன்னாள் திமுக தலைவர் மு கருணாநிதியின் நெருங்கிய நண்பரும் பல ஆண்டுகளாக திமுகவின் ஆதரவாளராக இருந்து வருபவருமான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் திடீரென

தமிழக காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்!

தமிழக அரசையும் தமிழக காவல்துறையும் அவ்வப்போது கடுமையாக விமர்சனம் செய்து வரும் உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில்

முன்னணி நடிகைக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! காரணம் இதுதான்…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தமன்னாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் சம்மன் மனு அனுப்பி இருக்கிறது.

நடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு: என்ன காரணம்?

பிரபல நடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்ப கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு எதிராக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு

மாஸ் நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்: பிறந்த நாளில் கிடைத்த ட்ரீட்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாஸன் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ஏராளமான ரசிகர்கள் தங்களுடைய