ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்த ஹாலிவுட் கலைஞர்

  • IndiaGlitz, [Thursday,December 31 2015]

2015ஆம் ஆண்டின் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடித்த 'பூலோகம்' திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. புத்தாண்டில் பல படங்கள் ரிலீசாகிற நிலையிலும் பூலோகம் படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் 'பூலோகம்' படத்தில் அமெரிக்க பாக்ஸிங் வீரராக நடித்த ஹாலிவுட் கலைஞர் நாதன் ஜோன்ஸ் இந்த படத்தின் வெற்றியை கேள்விப்பட்டு வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பூலோகம்' படத்தின் வெற்றி செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படத்தின் படக்குழுவினர்கள் அனைவரும் கடுமையாக உழைத்தனர். குறிப்பாக இயக்குனர் கல்யாணகிருஷ்ணன், ஹீரோ ஜெயம் ரவி மற்றும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகியோர்களுக்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என கூறியுள்ளார்.

நாதன் ஜோன்ஸின் நன்றி மற்றும் வாழ்த்து கடிதத்தால் 'பூலோகம்' படக்குழுவினர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More News

சூர்யாவை அடுத்து தனுஷின் நன்றி செய்தி

சூர்யா தயாரித்த இரண்டு படங்களின் வெற்றிக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்த செய்தியை சற்று முன் பார்த்தோம். இந்நிலையில் சூர்யாவை...

மாதவனின் 'இறுதிச்சுற்று' சென்சார் விபரங்கள்

மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'இறுதிச்சுற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

லிங்குசாமிக்கு 2வது முறையாக கைகொடுத்த பென் மூவீஸ்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் லிங்குசாமி தயாரித்திருந்தார்...

2015-ல் சின்ன பட்ஜெட்டில் வெளியான சிறப்பான திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில் ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து படம் எடுக்கும் டிரெண்ட் தற்போது வந்துவிட்டது. ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்றால் திரையில் பிரமாண்டத்தை காட்ட வேண்டும், அந்த பிரமாண்டத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்ற...

தமிழ் சினிமாவில் ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து படம் எடுக்கும் டிரெண்ட் தற்போது வந்துவிட்டது. ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்றால் திரையில் பிரமாண்டத்தை காட்ட வேண்டும்....