சசிகலா "தாய் இல்ல பேய்"....! காரசாரமாக பேசிய நத்தம் விஸ்வநாதன்.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் சசிகலா குறித்து மிகவும் காட்டமாக பேசியுள்ளார்.
திண்டுக்கல் அதிமுக கட்சி அலுவலகத்தில், இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும்,அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் ஆன நத்தம் விஸ்வநாதன் இதற்கு தலைமையேற்றார். இந்தக்கூட்டத்தில்சசிகளவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றியதை தொடர்ந்து,இவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறியதாவது,
கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் அதிமுகவில், சசிகலா கட்சியை குறுக்கு வழியில் கைப்பற்ற நினைக்கிறார்...? இதுபோல் நாடகமாடியும் கட்சி முக்கிய உறுப்பினர்களிடம் தொலைபேசியில் பேசி வருகிறார், கட்சியை கைப்பற்றி விடுவாறா...?இந்தக்கேள்வி நகைப்புக்குரியது, சசிகலாவை கட்சியில் ஏற்க தயாராக இல்லை, இவரால் அதிமுகவில் ஒரு சதவீத பாதிப்பை கூட ஏற்படுத்த முடியாது.
தாயையும், பிள்ளையையும் பிரிக்க முடியாது என சசிகலா கூறுகிறார்கள், இதற்கு உங்கள் கருத்து என்ன...?சசிகலா தாய் இல்ல பேய், வேஸ்ட் லக்கேஜ்-ஐ கட்சியால் சுமக்க முடியாது. அவரே தான் தன்னை தாய் என்று கூறிக்கொள்ள வேண்டும். அரசியலில் தவிர்க்கமுடியாத சக்தியல்ல சசி, தவிர்க்க வேண்டிய சக்தி அவர் என்று கூறினார்.
ஜெயலலிதா மரணம் குறித்து அமைத்த விசாரணை கமிஷனில் ஓபிஎஸ் ஆஜராகதது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது, அதில் என்ன நடந்தது என ஓபிஎஸ்-க்கு தெரியாது. இதனால் தான் அவர் கமிஷனில் ஆஜராகவில்லை. ஜெயலலிதா அம்மாவிற்கு என்ன நடந்தது என சசிக்கு மட்டுமே தெரியும், மனசாட்சியும் இல்ல, மண்ணாங்கட்டியும் இல்லை அவருக்கு என காரசாரமாக பதில் கூறினார் விஸ்வநாதன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com