close
Choose your channels

இணையத்தில் வைரலாகும் நடராஜனின் மனைவி, மகள் புகைப்படம்!

Monday, February 22, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது அந்த அணியில் இடம் பெற்றிருந்தார். நெட் பவுலராக சென்றிருந்த நடராஜன் ஒரு நாள் போட்டி, அதன் பின்னர் டி20 மற்றும் டெஸ்ட் தொடர் ஆகிய மூன்றிலும் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாமார். ஆஸ்திரேலியாவில் அசத்தலாக பந்து வீசிய நடராஜன், ஆஸ்திரேலியாவின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய அவருக்கு சொந்த ஊரில் மிகவும் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் இந்திய அணியில் அவர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடராஜன் சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் மகள் ஹன்விகா குறித்து அவர் கூறியதாவது: ’எங்களுடைய லிட்டில் தேவதை நீ. எங்கள் வாழ்க்கையின் மிக அழகான பரிசு. எங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நீ மட்டுமே காரணம். எங்களை பெற்றோராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நாங்கள் எப்போதும் உன்னை நேசிக்கிறோம்’ என்று பதிவு செய்துள்ளார். மகள் ஹன்விகாவுக்கு அழகான கவிதை வடிவில் பதிவு செய்த நடராஜனின் இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment