இணையத்தில் வைரலாகும் நடராஜனின் மனைவி, மகள் புகைப்படம்!

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது அந்த அணியில் இடம் பெற்றிருந்தார். நெட் பவுலராக சென்றிருந்த நடராஜன் ஒரு நாள் போட்டி, அதன் பின்னர் டி20 மற்றும் டெஸ்ட் தொடர் ஆகிய மூன்றிலும் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாமார். ஆஸ்திரேலியாவில் அசத்தலாக பந்து வீசிய நடராஜன், ஆஸ்திரேலியாவின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய அவருக்கு சொந்த ஊரில் மிகவும் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் இந்திய அணியில் அவர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடராஜன் சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் மகள் ஹன்விகா குறித்து அவர் கூறியதாவது: ’எங்களுடைய லிட்டில் தேவதை நீ. எங்கள் வாழ்க்கையின் மிக அழகான பரிசு. எங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நீ மட்டுமே காரணம். எங்களை பெற்றோராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நாங்கள் எப்போதும் உன்னை நேசிக்கிறோம்’ என்று பதிவு செய்துள்ளார். மகள் ஹன்விகாவுக்கு அழகான கவிதை வடிவில் பதிவு செய்த நடராஜனின் இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது.

More News

நடிகைகளை அடுத்து மாலத்தீவு சென்ற பிரபல தமிழ் நடிகர்!

கடந்த சில மாதங்களாக தமிழ் நடிகைகள் பலர் மாலத்தீவுக்கு சென்று வந்தனர் என்பதும் அங்கிருந்து பதிவு செய்யப்பட்ட அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தனர்

இரவு நேரத்தில் திடீரென சண்டை போட்ட சிவகார்த்திகேயன் - சூரி: வைரல் வீடியோ

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் இரவு நேரத்தில் திடீரென சண்டை போட்டுக் கொண்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கடுமையான வார்த்தைகளில் கவின் பதிவு செய்த காதல் கவிதை யாருக்காக?

நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையான வார்த்தைகளில் காதல் கவிதை ஒன்றை பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஜிவி பிரகாஷின் 'வணக்கம்டா மாப்ள' அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் 'வணக்கம்டா மாப்ள' என இன்று காலை அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

பிகினி உடையில் 'பிக்பாஸ் தமிழ்' நடிகை: வைரல் வீடியோ

பிக்பாஸ் தமிழ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் திரைப்பட நடிகையுமான ரைசா வில்சன் தனது சமூக வலைத்தளத்தில் பிகினி உடை அணிந்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும்