நடராஜன் இந்திய அணிக்கு கிடைத்த சொத்து: வெற்றிக்கு பின் விராத் பேட்டி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இன்றைய போட்டியில் தமிழக வீரர் நடராஜன் முதல்முறையாக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் 162 ரன்கள் என இந்தியா கொடுத்த இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 150 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது

இன்றைய போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மிக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் அதில் ஒரு விக்கெட் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மாக்ஸ்வல் விக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் சர்வதேச டி20 போட்டியில் நடராஜன் எடுத்த 3 விக்கெட்டுகள் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டி முடிந்ததும் பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி ‘இன்றைய போட்டியில் நடராஜன் மிக அருமையாக பந்து வீசினார் என்றும் அவர் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து என்றும் அவர் கூறியுள்ளார்