டெஸ்ட் போட்டிக்கான வெள்ளை நிற ஜெர்சியில் நடராஜன்… வைரல் புகைப்படம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற இருக்கிறார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 1-1 என்ற சமன் கணக்கில் விளையாடி வருகிறது. தற்போது 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் நடராஜன் விளையாட இருக்கிறார் என்ற தகவலை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
முன்னதாக ஐபில் கிரிக்கெட் போட்டியில் சிறந்த யாக்கர் பந்துகளை வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர் அடுத்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தார். அடுத்து டி20 போட்டிகளிலும் இவரது பந்துவீச்சு பெரிதும் பாராட்டப்பெற்றது. அதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என சந்தேகம் இருந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்காக வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக நடராஜன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த உமேஷ் யாதவுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு பதிலாக நடராஜன் இந்தப் போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவரது முன்னேற்றத்தைப் பார்த்த பலரும் நடராஜனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவருடைய பயிற்சியாளர் வாசு நடராஜன் “நடராஜனின் முன்னேற்றம் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான ஆலோசனையும் கூற இருக்கிறேன். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் போல் டெஸ்ட் போட்டியிலும் வெறும் யார்க்கர் பந்துகளை மட்டும் வீசிக் கொண்டிருக்க முடியாது.
நடராஜன் பந்தை ஸ்விங் செய்ய வேண்டும். மேலும் அவர் சீரான கோட்டில் பந்தை வீச வேண்டும். அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. டேஸ்ட் போட்டியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் பந்துவீச்சில் பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு கற்றுக் கொண்டால் மட்டுமே டெஸ்ட் போட்டியில் நடராஜன் நீடித்திருக்க முடியும் ” என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நடராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்திருக்கிறார். அதில் இந்திய அணிக்காக வெள்ளை நிற ஜெர்சி அணிவது மிகவும் பெருமையாக இருக்கிறது எனக் குறிப்பிட்டு உள்ளார். இதனால் நடராஜன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது உறுதியாகி இருக்கிறது. அவருக்கு தமிழக வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
A proud moment to wear the white jersey ???? Ready for the next set of challenges ????#TeamIndia @BCCI pic.twitter.com/TInWJ9rYpU
— Natarajan (@Natarajan_91) January 5, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com