ஆஸ்திரேலியா மைதானத்தில் அஜித் ரசிகர்கள்: தெறிக்கவிடும் நடராஜன் போஸ்டர்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து தற்போது ஆஸ்திரேலிய அணியினர் பேட்டிங் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த போட்டியை நேரில் பார்க்க பார்வையாளர்களாக சிட்னி மைதானத்திற்கு சென்ற அஜித் ரசிகர்கள், அஜித் மற்றும் நடராஜன் இணைந்திருக்கும் பிளக்ஸ் போர்டை கையில் வைத்து மைதானத்தை தெறிக்க வைத்து கொண்டிருக்கின்றனர்.

இந்திய அணியில் இடம் பெற்று விக்கெட்டுகளை குவித்து சாதனை செய்துவரும் நடராஜனுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என குறிப்பிடப்பட்டிருக்கும் பிளக்ஸ் போர்டை அஜித் ரசிகர்கள் கையில் பிடித்துள்ளதை ஆஸ்திரேலிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி அஜித் ரசிகர்கள் தெறிக்கவிடும் நடராஜனின் போஸ்டர் தற்போது ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது