close
Choose your channels

ஒரே தொடரில் மூன்று வாய்ப்புகள்: யார்க்கர் கிங் நடராஜனுக்கு அடித்த யோகம்!

Friday, January 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜன் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார் என்பதும் அவரது அபாரமான பந்து வீச்சின் காரணமாக அவர் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் முதன்முறையாக ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன், அதன் பின்னர் டி20 அணியிலும் இடம் பிடித்தார் என்பதும் இந்த இரு தொடர்களிலும் அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது என்பதும் ஆஸ்திரேலியாவின் முக்கிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி கொண்டிருக்கும் நிலையில் டெஸ்ட் தொடரிலும் விளையாட நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவரான உமேஷ் யாதவ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நடராஜன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என பிசிசிஐயின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று தொடர்களிலும் நடராஜன் அறிமுகமாகியுள்ளது அவரது யோகம் மட்டுமின்றி அனைத்து தமிழர்களுக்கும் பெருமைக்குரிய ஒரு விஷயமாகும்

ஏற்கனவே இந்திய அணியில் ரோகித் சர்மா இணைந்து உள்ள நிலையில் தற்போது நடராஜனும் இணைந்துள்ளதால் இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் வென்று தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment