அனுஷ்காவை கமல்-விக்ரம் கலந்த கலவையாக பார்க்கின்றேன். ஜெயம் ராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
பி.வி.பி. நிறுவனம் தயாரித்துள்ள 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இந்த விழாவில் படத்தின் நாயகன் ஆர்யா, நாயகி அனுஷ்கா, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் நாசர், கிருஷ்ணா, இயக்குனர் ஜெயம் ராஜா, இயக்குனர் திருமணி புகழேந்தி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஏ.எல்.அழகப்பன், சிவி.குமார், சிவா, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்றைய விழாவில் 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் பாடல் மற்றும் டிரைலர் ஆகிய இரண்டும் வெளியிடப்பட்டது. இப்படத்தின் டிரைலரை இயக்குனர் ஜெயம் ராஜா வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: "இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் பற்றி பரவலான ஒரு கருத்து அனைவரிடமும் இருந்து வருகிறது. அதை சரியாக புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் இப்படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
ஏற்கனெவே, இயக்குனர் பாக்யராஜ் உடல் பருமனை மையமாக வைத்து சின்ன வீடு` என்ற படத்தை கொடுத்தார். அது அன்றைய காலகட்டத்துக்கு கச்சிதமாக பொருந்தியது. அதேபோல், இந்த படம் இன்றைய காலகட்டத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்' என்று கூறினார்.
மேலும் அனுஷ்கா குறித்து ஜெயம் ராஜா கூறியபோது, "அனுஷ்கா இதுவரை எனக்கு அறிமுகமானதில்லை. ஆனால், அவருடைய படங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். அனுஷ்காவை பார்க்கும்போது, கமலும், விக்ரமும் கலந்த ஒரு நடிகையாகவே நான் பார்க்கிறேன். அவரிடம் நிறைய திறமை இருக்கிறது என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments