பிரபல நடிகையை மகளாக தத்தெடுத்த நாசர்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்யா, அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இந்த விழாவிற்கு ஆர்யா, அனுஷ்கா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் நாசர் பேசியதாவது: நான் இந்த விழாவுக்கு ஒரு நடிகராகவோ, நடிகர் சங்க தலைவராகவோ வரவில்லை. ஒரு அப்பாவாக வந்திருக்கிறேன். நான் அனுஷ்காவை எனது மகளாக தத்தெடுத்திருக்கிறேன். இது பலருக்கும் தெரியாது. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு, அனுஷ்கா என்னிடம் வந்து இந்த படத்தின் கதையை சொன்னார். குண்டான வேடத்தில் நடிக்க சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம் என்று அவரிடம் சொன்னேன். ஆனால், அவரோ, தானே சிரத்தை எடுத்து இதில் நடிப்பதாக கூறினார். அவர் தொழில் மீது வைத்துள்ள மரியாதையை அது காட்டுகிறது' என்று கூறினார்.
மேலும் ஆர்யா குறித்து நாசர் கூறியபோது, "ஆர்யா எப்போதும் பெண்களுடன் மட்டுமே பேசுவார் என்று பலரும் கூறுகின்றனர். அப்படியெல்லாம் கிடையாது. அவர் எல்லோருடனும் கலகலப்பாக பழகக் கூடியவர். அவருடன் நான் 3-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அவர் இருந்தால் அந்த படப்பிடிப்பு தளமே மிகவும் கலகலப்பாக இருக்கும். அவருடன் நடித்தது எல்லாம் மறக்கமுடியாது' என்று கூறினார்.
'பாகுபலி' இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி இசையமைத்துள்ள இந்த படத்தை பிவிபி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் நவம்பர் 27ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments