close
Choose your channels

ஹாலிவுட்டில் தயாராகும் சுதந்திர போராட்ட திரைப்படத்தில் நாசர்

Monday, February 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் சமீபத்தில் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார் என்பதையும் இந்த படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் விரைவில் கலந்து கொள்ளவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் பிரபல குணசித்திர மற்றும் வில்லன் நடிகரும், நடிகர் சங்க தலைவருமான நடிகர் நாசரும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

The Solar Eclipse' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள பீரியட் படம் ஒன்றில் நடிக்க நாசர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவர் SSP அசோக் என்ற போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. Pankaj Sehgal மற்றும் Karim Traida ஆகியோர் இயக்கவுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர்களான ஓம்புரி, ரஜித் கபூர் மற்றும் ஆனந்த் மகாதேவன் ஆகியோர்களும் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் குறித்து நாசர் தெரிவிக்கையில், 'பிப்ரவரி 16முதல் இலங்கையில் ஆரம்பமாகவுள்ள 'The Solar Eclipse' ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளேன். இந்தியா சுதந்திரம் ஆகும் முன்பு நடைபெறும் வகையில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தனிப்பட்ட சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாறு படம் இல்லை ஆயினும் இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெறும் ஒரு கதை' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.