சிம்புவை வெளியேற விடமாட்டேன் - நாசர்

  • IndiaGlitz, [Thursday,April 21 2016]

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகுவது குறித்து நேற்று வந்த செய்தி குறித்து நடிகர் சங்கத்தலைவர் நாசர் கூறியபோது, 'சங்கத்தில் இருந்து சிம்பு விலகுவதாக ஊடகங்களில் மட்டுமே செய்திகள் வெளியாகி வருகின்றன. எங்களுக்கு இதுகுறித்து சிம்பு தரப்பில் இருந்து எந்த செய்தியும் வரவில்லை. ஒருவேளை சிம்பு வெளியேறுவதாக எங்களுக்கு தகவல் வந்தால் கண்டிப்பாக அவரை வெளியேற விடமாட்டோம். அவரை அழைத்து பேசி அவருடைய பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்வோம்' என்று கூறினார்.

மேலும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு சரத்குமார், ராதிகா உள்பட அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் அழைப்பிதழ் அனுப்பியிருந்ததாகவும், அழைப்பிதழ் கிடைத்ததால்தான் நிரோஷா, ராம்கி, விஜயகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் 'தமிழ் நடிகர்கள் சங்கம்' என புதிய நடிகர் சங்கம் உருவாகவுள்ளதாக வெளிவந்த செய்தி குறித்து நாசர் கூறியபோது, 'தேர்தல் நேரத்தில் சில கருத்துவேறுபாடுகள் இருந்தது உண்மைதான். ஆனால் அதற்காக சங்கம் பிரிவதற்கு வாய்ப்பே இல்லை. சங்கம் அதை பார்த்துக்கொண்டு சும்மாவும் இருக்காது' என்று கூறினார்.

More News

சசிகுமாரின் வெற்றிவேலுடன் இணையும் சமுத்திரக்கனி

சசிகுமார், மியா ஜார்ஜ் நடித்த 'வெற்றிவேல்' திரைப்படம் நாளை முதல் வெளியாகவுள்ளது. லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடும்...

சிம்புவுக்கு ராதிகா கூறிய அறிவுரை

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் முடிவடைந்ததில் இருந்து புதிய நிர்வாகிகளிடம் நடிகர் சிம்பு கருத்துவேறுபாடுகளுடனே இருந்து வந்தார். சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை....

சசிகுமாரின் 'வெற்றிவேல்' திரைமுன்னோட்டம்

பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'தாரை தப்பட்டை' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அவருடைய வழக்கமான பாணி படமான காதலை சேர்த்து வைக்கும் கதையம்சம் கொண்ட 'வெற்றிவேல்' திரைப்படம்....

அஜித்துடன் கனெக்ஷன் ஆகிறார் சிவகார்த்திகேயன்

அஜித் நடித்த 'வீரம்', 'வேதாளம்' ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் சிவா, அடுத்து 'அஜித் 57' படத்தையும் இயக்கவுள்ளார் என்ற தகவல் உறுதியாகியுள்ள நிலையில்....

செங்கல்பட்டு பிரச்சனை: மதுரை விநியோகிஸ்தர் சங்கத்தின் அதிரடி முடிவு

கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் கூடி, செங்கல்பட்டு ஏரியாவில் 'தெறி' படத்தை திரையிடாத திரையரங்குகளுக்கு இனிமேல் எந்த திரைப்படமும் வழங்கப்படுவதில்லை....