ராதாரவிக்கு நாசர் எழுதிய காட்டமான கடிதம்!

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

'கொலையுதிர்க்காலம்' திரைப்படத்தின் ஆடியோ வெளீயிட்டு விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு உண்மையிலேயே மனம் வருந்துகிறது. இதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்த மேடையில் மட்டும் அல்ல, பல காலங்களாக இணையதள நேர்காணலிலும் பொது மேடைகளிலும் திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரடை அர்த்த வசனங்களையும் பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறீர்கள். இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கிறது

இது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் மற்ற நடிகர்களுக்கும் அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும் ஒரு அவமானமான சூழ்நிலையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி தருகிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை

திரைத்துறையில் தங்களது தந்தையாருக்கு பிறகு தொடர்ச்சியாக ஐம்பது வருடங்கள் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கக்கூடிய தாங்கள், தங்களுடைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால் அது வருகின்ற தலைமுறைக்கு வழிகாடுதலாக இருக்கும்.

ஆனால் இதுபோன்ற கொச்சையான கீழ்த்தரமான பேச்சுக்கள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாதது மட்டுமில்லாமல் திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையும் சீரழிக்கும் என்பதை ஏன் உணரவில்லை. இதை உணர்ந்து இதுபோன்ற வக்கிரமான பேச்சை தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் .

அதை தவிர்த்து இதுபோன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படூவீர்கள் என்றால் தென்னிந்திய நடிகர் சங்கம் திரைத்துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாக தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு நடிகர் சங்க தலைவர் நாசர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

ஸ்டாலினை அடுத்து ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்த கனிமொழி!

நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி கூறிய அநாகரீகமான கருத்துக்கு அனைத்து தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்

அமமுக வேட்பாளரான சிம்பு படத்தயாரிப்பாளர்

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அக்கட்சியின் திருநெல்வேலி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சு: ராதாரவி விளக்கம்

தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக நடிகர் ராதாரவி விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: 

ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

நடிகை நயன்தாரா குறித்து கண்ணியக்குறைவான வகையில் விமர்சனம் செய்த நடிகர் ராதாரவியை சற்றுமுன் திமுக சஸ்பெண்ட் செய்தது. ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர்

என் வாழ்க்கை வரலாற்றை மூன்றே நாட்களில் படமாக்கலாம்: இளையராஜா

பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகியும், உருவாக்கப்பட்டும் வருகின்றன. தோனி, சச்சின், மேரிகோம், உள்பட பல வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வசூலிலும் சாதனை புரிந்துள்ளது