நாசர் மகனை ஹீரோவாக்கும் பிரபல தயாரிப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அட்டகத்தி, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி உள்பட பல திரைப்படங்களை சிவி குமார் தனது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்து உள்ளார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது சிவி குமார் தயாரிக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர் நாசர் மகன் அபிஹாசன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் தயாரிப்பில் விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ என்ற திரைப்படத்தில் அக்சராஹாசன் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபிஹாசன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை கேபிள்சங்கர் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல திறமையுள்ள இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை அறிமுகப்படுத்திய சிவி குமார் தற்போது நாசர் மகனையும் ஹீரோவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The Most Happening @ThirukumaranEnt @icvkumar who have produced most No of films & given lots of talented directors is Happy to launch #ProductionNo22
— Diamond Babu (@idiamondbabu) November 1, 2020
Directed by @cablesankar *ing @AbiHassan_ in a Most Dynamic Role @nasser_kameela pic.twitter.com/8cBP0VG9jD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com