டப்பிங் சங்க தேர்தல்: சின்மயி அணியில் இணைந்த நாசர்!
- IndiaGlitz, [Friday,January 31 2020]
டப்பிங் யூனியன் சங்கத்திற்கு வரும் பிப்ரவரி 15ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ராதாரவி அணி மற்றும் சின்மயி தலைமையிலான ராமராஜ்யம் அணி ஆகிய இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. ‘ராமராஜ்யம்’ என்ற திரைப்படம் தான் முதல் டப்பிங் படம் என்பதால் அந்த பெயரை சின்மயி தனது அணிக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிரது. மேலும் டப்பிங் யூனியன் தலைவராக தற்போது இருக்கும் ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் இராமராஜ்யம் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சின்மயி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பதும் வேட்புமனு தாக்கல் செய்யும்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ராம்ராஜ் அணியின் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகர் நாசர் போட்டியிட உள்ளார். அதற்காக அவர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நாசரின் சார்பாக அவரது வேட்புமனுவை டப்பிங் கலைஞர் ஜெயராமன் என்பவர் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கன்வே நடிகர் சங்க தேர்தலின்போது ராதாரவின் எதிரணியில் இருந்த நடிகர் நாசர் தற்போது டப்பிங் யூனியன் சங்கத்தின் தேர்தலிலும் அவரது அணிக்கு எதிராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது