போலீஸ் கமிஷனரை சந்தித்தது ஏன்? நாசர்-விஷால் விளக்கம்

  • IndiaGlitz, [Friday,October 16 2015]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், பாண்டவர் அணியினர் என்று கூறப்படும் விஷால் அணியினர் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அவர்களை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த மனுவில் தேர்தல் அன்று விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தபால் ஓட்டுக்கள் வரத்தொடங்கியுள்ளதால் தபால் ஓட்டுக்களை சேகரித்து வைக்கப்படும் பெட்டிக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என காவல்துறையினர்களிடம் கொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக நடிகர் சங்க தலைவர் வேட்பாளர் நாசர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஷால் கூறியபோது, 'தேர்தலுக்காக ஏற்கனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளது. எனினும் தேர்தல் நாளில் மூத்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாக்களிக்க வரவிருப்பதால், விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு கேட்கவே இன்று போலீஸ் கமிஷனரை சந்தித்ததாக கூறினார்.

More News

HCL ஷிவ்நாடாரின் பாராட்டை பெற்ற 'தனி ஒருவன்'

ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ஊடகங்கள் மற்றும் திரையுலகினர்களின் பாராட்டை பெற்று மாபெரும் சூப்பர் ஹிட்...

நடிகர் சங்க தேர்தல் குறித்து பாரதிராஜா கருத்து

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் தரப்பினர்கள் ஒருவருக்கொருவர் கருத்து மோதல்...

நடிகர் சங்க தேர்தல்: வழிகாட்டும் நெறிமுறைகள் அறிவிப்பு

நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் அவர்கள் மேற்பார்வையில் நடைபெறவுள்ள நிலையில்...

10 எண்றதுக்குள்ள டூயட் இல்லாத காதல் படம். விக்ரம்

விக்ரம், சமந்தா நடிப்பில் விஜய் மில்டன் இயக்கிய '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது...

ரஜினியின் 'லிங்கா'வுடன் கனெக்ஷன் ஆகும் தனுஷின் 'தங்கமகன்'?

இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 'தங்க மகன்'...