நிலவில் ஆய்வு மேற்கொண்ட நாசா… அதிரடி கண்டுபிடிப்பால் மகிழ்ச்சி!!!
- IndiaGlitz, [Tuesday,October 27 2020]
பனிக்கட்டி வடிவத்தில் நிலவின் தென்துருவப் பகுதிகளில் நீர் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. ஆனால் அதை நீராக மாற்றுவதற்கு ஹைட்ரஜனை பூமியில் இருந்துதான் கொண்டு செல்ல வேண்டும். மேலும் அங்குள்ள பாறைகளில் இருந்து ஆக்சிஜனை எடுத்து அதோடு ஹைட்ரஜனை இணைத்து நீராக மாற்றிக் கொள்ளலாம். இப்படித்தான் நிலவில் நீரைப் பயன்படுத்த முடியுமே தவிர வேறு வழியில்லை என விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியிருந்தனர்.
இந்நிலையில் நிலவில் சூரிய ஒளிபடும் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை நேற்று அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. நிலவில் பறக்கும் நாசிவிற்கு சொந்தமான சோஃபியா விமானம் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் பூமியில் இருந்து பார்க்கும்போது தெரியும் நிலவின் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள பெரிய பள்ளங்களில் ஒன்றான கிளாவியஸ் பள்ளத்தில் நீரின் மூலக் கூறுகளை சோஃபியா கண்டறிந்துள்ளது.
இவ்வாறு காணப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருக்கலாம் எனவும் நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதற்கு முன்பு இந்தியாவின் சந்திராயன் -1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டில் நிலவின் மேற்பரப்பில் முதன் முதலில் தண்ணீரைக் கண்டுபிடித்தது. இருப்பினும் ஆராய்ச்சியாளர்களால் அது நீரின் மூலக்கூறு ஹைட்ராக்சில் மூலக்கூறா என கணிக்க முடியவில்லை. தற்போது நாசா கண்டுபிடித்துள்ள மூலக்கூறில் தண்ணீர் இருப்பதற்கான அடையாளம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.