கொரோனாவால் இயற்கைக்கு ஏற்பட்ட மாற்றம்: நாசாவின் ஆச்சரிய புகைப்படம்
- IndiaGlitz, [Sunday,April 12 2020]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி, லட்சக்கணக்கானோர் பலியாகி உள்ள நிலையில் இந்த வைரஸ் மனித இனத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. இருப்பினும் இந்த வைரசால் இயற்கை மிகப்பெரிய அளவில் தூய்மை அடைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கங்கை யமுனா உள்பட பல நதிகள் தற்போது மிகவும் தூய்மையாகவும், அந்த ஆறுகளின் தண்ணீர் பயன்படுத்தும் அளவுக்கு மாறிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதால் அந்த தொழிற்சாலை கழிவுகள் கலக்காதால் அனைத்து ஆறுகளும் தற்போது தூய்மையாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியானதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது ஆறுகள் மட்டுமின்றி காற்று மாசுபாடு அளவும் மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தெரிவிக்கின்றான. சமீபத்தில் நாசா வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் காற்று மாசுபாடு 30% முன்பை விட தூய்மையாக உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
எனவே கொரோனாவால் மனித இனத்திற்கே மிகப்பெரிய அழிவாக இருந்தாலும் இயற்கை மிகப்பெரிய அளவில் தூய்மையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கொரோனா பிரச்சனை முடிந்த பிறகு காற்றின் மாசு மற்றும் ஆறுகளின் தூய்மையை தற்போது இருப்பது போல் தூய்மையாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.