செவ்வாய் கிரகத்தில் குடியேறலாமா? நாசா வெளியிட்ட அட்டகாசமான தகவல்!
- IndiaGlitz, [Sunday,October 10 2021]
செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் ஓடியதற்கான ஆதாரம் இருப்பதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியிட்டு இருக்கிறது. முன்னதாக செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக நாசா கூறிய நிலையில் தற்போது ஆறுகள் இருந்ததற்கான அடையாளத்தை வெளியிட்டு இருக்கிறது.
பெர்சவரன்ஸ் எனும் விண்கலம் மூலம் நாசா விண்வெளி நிறுவனம் ரோவர் எனும் ஆய்வுக் கருவியை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி இருக்கிறது. கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் ஜெசேரோ எனும் பள்ளத்தாக்கில் தரையிறங்கிய இந்த விண்கலம் தற்போது அந்தப் பகுதியை புகைப்படங்களாக எடுத்து அனுப்பி வருகிறது.
ரோவர் எடுத்து அனுப்பிய புகைப்படங்கள் மூலம் கடந்த 3.7 பில்லியன் வருடங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் ஓடியதற்கான ஆதாரம் இருப்பதாகத் தற்போது நாசா விஞ்ஞானிகள் தெளிவுப் படுத்தியுள்ளனர். மேலும் நீர் நிலைகள் இருந்ததற்கான ஆதாரத்தையும் ரோவர் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
பூமியில் ஏற்பட்டு வரும் பேரிடர்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளைக் குறித்து கவலைப்படும் விஞ்ஞானிகள் தொடர்ந்து வேற்று கிரகங்களில் உயிரினம் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா? என ஆய்வுசெய்து வருகின்றனர். அந்த வகையில் பூமிக்கு மிக அருகில் உள்ள செவ்வாய் கிரகத்தைப் பற்றி அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றன.
தற்போது செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் ஓடியதற்கான அடையாளம் மற்றும் நீர்நிலைகள் இருந்ததற்கான அடையாளம் கிடைத்து இருக்கிறது. மேலும் அங்குள்ள பாறைகளின் தன்மையும் செவ்வாய் கிரகத்தில் நீர்நிலைகள் இருந்ததற்கான ஒற்றுமையை காட்டுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.