எங்களுக்கு ஊக்கம் அளித்து உள்ளீர்கள்: இஸ்ரோவுக்கு நாசா பாராட்டு!

  • IndiaGlitz, [Sunday,September 08 2019]

நிலாவை இன்னும் சில நாடுகள் பூமியில் இருந்து அண்ணாந்து மட்டுமே பார்த்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய விஞ்ஞானிகளின் சீரிய முயற்சியால் நிலாவிற்கு மிக அருகில் அதாவது 2.1 கிமீ வரை நெருங்கிவிட்டோம். நிலவில் இறங்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் இந்தியாவின் இந்த சாதனையை இன்னும் பல நாடுகள் நினைத்துக்கூட பார்க்க முடியாத இடத்தில் உள்ளது. இந்தியாவை விட பலமடங்கும் பொருளாதாரத்தில் வலிமையாக இருக்கும் அமெரிக்காவின் நாசாவை விட இந்திய விஞ்ஞானிகள் செய்த சாதனை மகத்தானது.

இந்த நிலையில் சந்திரயான் 2 திட்டத்திற்காக இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகளுக்கு நாசா பாராட்டு தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரை நிலவில் தரையில் இறக்க  இஸ்ரோ மேற்கொண்ட கடும் முயற்சி பாராட்டத்தக்கது என்று கூறியுள்ள நாசா, ‘விண்வெளி ஆய்வு திட்டம் என்பது மிகவும் சிக்கலானது கடினமானது என்றும், குறிப்பாக நிலவின் தென்பகுதியில் ஆய்வு செய்வது என்பது ஒரு மகத்தான பணி என்றும், அதை செய்வதற்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 திட்ட முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளது. மேலும் இஸ்ரோ விஞ்ஞானிகல் தங்களுக்கு ஊக்கமளித்துள்தாகவும், எதிர்காலத்தில் சூரியனை ஆராயும் திட்டங்களில் இணைந்து பணியாற்ற விருப்பபப்டுவதாகவும் நாசா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

நாசாவை போலவே இஸ்ரோ விஞ்ஞானிகலுக்கு ஆஸ்திரேலிய விண்வெளி ஆராய்ச்சி மையமும் ஐக்கிய அரபு அமீரக விண்வெளி ஆராய்ச்சி மையமும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.