விமானத்தில் திடீர் கோளாறு… நூலிலையில் உயிர் தப்பிய நடிகை ரோஜா!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய சினிமாக்களில் பிரபல நடிகையாக வலம்வந்தவரும் தற்போது ஆந்திர அரசியலில் முக்கிய தலைவராகவும் இருந்துவரும் நடிகை ரோஜா சென்ற விமானம் இன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கோளாறு ஏற்பட்டு பின்னர், விபத்தில் இருந்து நூலிலையில் தப்பியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான “செம்பருத்தி“ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதற்குப் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம்வந்தார். மேலும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவர் அரசியலில் களம் இறங்கினார். அதைத் தொடர்ந்து தற்போது நகரில் தொகுதியில் இரண்டுமுறை வெற்றிப்பெற்று ஆந்திரச் சட்டசபையில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகை ரோஜா இன்று விஜயவாடாவில் இருந்து திருப்பதிக்கு தனியார் விமானத்தில் சென்றுள்ளார். அந்த விமானம் நடுவானில் பறந்து சென்றபோது திடீர் கோளாறு ஏற்பட்டதாகவும் அதையடுத்து சாதுர்யமாக செயல்பட்ட விமானிகள் பெங்களூரு விமான நிலையத்தில் விமானத்தைப் பத்திரமாக தரையிறக்கியதாகவும் நடிகை ரோஜா தெரிவித்து உள்ளார். மேலும் பெங்களூரு சென்ற பயணிகளை கிட்டத்தட்ட 4 மணிநேரம் வெளியே செல்ல அவர்கள் அனுமதிக்க வில்லை என்றும் நடிகை ரோஜா தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் நடிகை ரோஜா சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு தற்போது பெங்களூருவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பெங்களூரு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. அவரது ரசிகர்களும் தற்போது பதற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments