மாடல் பெண்ணாக மாறிய நரிக்குரவ பெண்: வீடியோ வைரல்

  • IndiaGlitz, [Sunday,September 26 2021]

நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சாக்லேட் என்ற பெண் மாடல் பெண்ணாக மாறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த சாக்லேட் என்ற பெண்ணை பேட்டி எடுத்தபோது அவர் தான் மாடல் பெண்ணாக மாறவேண்டும் என்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிய வேண்டும் என்ற ஆசையை தெரிவித்திருந்தார். அந்த ஆசையை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது

நரிக்குறவர் சமூக பெண் சாக்லெட் அவர்களை பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்று அவருக்கு மாடல் பெண் போல மேக்கப் போட்டு, ஜீன்ஸ் பேண்ட் அணிய வைத்து அவருடைய ஆசையை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் மற்ற பெண்களை போல மாடல்களாக மாறுவதற்கு அடிப்படை தேவை கல்வி என்பதும் அவர்கள் கல்வி கற்று நல்ல வேலைக்கு சேர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது

சாக்லேட் என்ற இந்த ஒரு பெண் மட்டுமன்றி அனைத்து நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் சமுதாயத்தில் முன்னேற வேண்டுமென்றால், கல்வி அவர்களுக்கு அவசியம் என்பதும் அதனை அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்த வீடியோ முழு வீடியோ இதோ:

More News

மருத்துவத்துறை ஊழலை தோலுரிக்கும் 'சின்னஞ்சிறு கிளியே'

மருத்துவத்துறையில் நடைபெறும் மாபெரும் ஊழலை வெளிப்படுத்தும் படமாக சின்னஞ்சிறு கிளியே என்ற திரைப்படம் நேற்று வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர் 

'அங்காடித்தெரு' மகேஷின் 'வீராபுரம்' படம் எப்படி?

இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய 'அங்காடி தெரு' என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த மகேஷ் நடித்துள்ள அடுத்த படம் 'வீராபுரம்'. இந்த படம் மணல் திருட்டு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள்

அப்பாவாகிறார் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்: ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அப்பாவாக போகிறார் என்ற செய்தியை கேட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

பேரக்குழந்தைகளுடன் நடிகர் செந்தில்: வைரல் புகைப்படங்கள்!

கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து வரும் செந்தில் தனது பேரக் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'மிஸ் சூப்பர் குளோப்' நடிகையா?

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள் நெருங்க நெருங்க இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன