கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்திற்கு சிக்கலா? பிரபல நடிகரின் தகவலால் பரபரப்பு

  • IndiaGlitz, [Wednesday,April 29 2020]

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகை விஜயநிர்மலா வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் விஜய நிர்மலாவின் மகன் நடிகர் நரேஷ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தனது தாயாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரிக்க யாருக்கும் அனுமதி தரவில்லை என்றும் இது குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி வெறும் வதந்தி தான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தானே தனது தாயாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதியதாகவும், அதற்கு தனது தாயாரும் உதவியதாகவும் கூறியுள்ளார். ஆனால் தாயாரின் மறைவுக்கு பின்னர் அந்த பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இருப்பினும் விரைவில் அந்த திரைக்கதையை எழுதி முடித்துவிட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனவே தனது தாயார் விஜய நிர்மலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் வதந்தியே என்று அவர் உறுதிபட கூறியுள்ளதை அடுத்து கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த விஜயநிர்மலா அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற கின்னஸ் சாதனையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெமினி கணேசன் நடித்த ’பணமா பாசமா’ என்ற திரைப்படத்தில் ’எலந்த பழம் எலந்த பழம்’ என்ற பாடலுக்கு நடனமாடியவர் விஜயநிர்மலா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

700 கிமீ நடந்து வந்த விழுப்புரம் இளைஞரை கைது செய்த போலீஸ்!

ஹைதராபாத்திலிருந்து சொந்த ஊரான விழுப்புரத்திற்கு சுமார் 700 கிலோமீட்டர் நடந்து வந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பால்கனி அரசு என விமர்சனம் செய்த கமலுக்கு அமைச்சர் பதிலடி

கடந்த சில மாதங்களாகவே உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் மத்திய, மாநில அரசுகளை சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார்.

அமெரிக்காவில் கொரோனா தாக்கம்!!! பல இந்திய மாணவர்களின் கனவை வீணாக்கியிருக்கிறது!!!

கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவை புரட்டிப் போட்டிருக்கிறது. பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியிருக்கும் நிலையில் உயிரிழப்பும் 60 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

கொரோனாவால் வியட்நாமில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை!!! எதிர்கொண்ட விதம்???

கொரோனா பலி எண்ணிக்கைக் குறித்து உலக நாடுகள் கவலைத் தெரிவித்து வருகின்றன. பரவல் வேகமும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் நாளை எத்தனை மணி வரை கடைகள் திறந்திருக்கும்? தமிழக அரசு தகவல்

கொரோனா பாதிப்புக் காரணமாக மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 29 வரையிலும்,