இந்தியாவில் பொது ஊரடங்கு குறித்து பேச்சுவார்த்தையா? மத்திய அரசு சொல்வது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா முழுக்கவே தற்போது மருத்துவமனைகளில் படுக்கை இல்லை, ஆக்சிஜன் இல்லை, ரெம்டசிவிர் மருந்து இல்லை, சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலைந்துபோய் உள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி மட்டும் இந்தியாவில் ஒரேநாளில் 4 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டன. தற்போது தினசரி பாதிப்பு சற்று குறைந்து இருந்தாலும் மீண்டும் இதேநிலை நீடிக்குமா? என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது.
காரணம் 5 மாநிலத் தேர்தல்கள் சமீபத்தில் நடைபெற்று முடிந்து இருக்கிறது. அதோடு இந்தியா முழுக்கவே தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் பல மாநிலங்களில் பொது ஊரடங்கு குறித்து ஆலோசனையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் கொரோனா பாதிப்புகளுக்கு ஒரேவழி முழு பொது ஊரடங்கை அறிவித்து சற்று இந்த எண்ணிக்கையை தணிக்கலாம் என விஞ்ஞானிகள் குழுவும், மருத்துவக் குழுவும் ஆலோசனை வழங்கி வருகிறது.
அதோடு எதிர்க்கட்சி எம்.பி.யான ராகுல் காந்தியும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் பொது ஊரடங்கை அறிவிக்கும்போது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதற்காக மத்திய அரசு வரிச்சலுகையை அறிவிக்க வேண்டும், வாழ்வாதாரத்திற்கு தேவையான நிவாரணத்தை வழங்க வேண்டும், தவணை கடன்களில் வரிச்சலுகை போன்றவற்றை அறிவிக்க வேண்டும் என அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படியான வரிச்சலுகைகயை அறிவிக்கும்போது மத்திய அரசின் வருமானம் குறைந்து போகும் என்ற கவலையும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முழு பொது ஊரடங்கு கொண்டு வரப்படுமா என்பது குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி பேசிய பிரதமர் நரேந்திர மோடி பொது ஊரடங்கு என்பதை இறுதி ஆயுதமாகவே பயன்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார். ஆனால் இந்தியாவின் தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது மத்திய அரசு பொது ஊரடங்கு குறித்து விரைவில் முடிவெடுக்கும் என்றே கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com