இந்தியாவில் பொது ஊரடங்கு குறித்து பேச்சுவார்த்தையா? மத்திய அரசு சொல்வது என்ன?

இந்தியா முழுக்கவே தற்போது மருத்துவமனைகளில் படுக்கை இல்லை, ஆக்சிஜன் இல்லை, ரெம்டசிவிர் மருந்து இல்லை, சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலைந்துபோய் உள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி மட்டும் இந்தியாவில் ஒரேநாளில் 4 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டன. தற்போது தினசரி பாதிப்பு சற்று குறைந்து இருந்தாலும் மீண்டும் இதேநிலை நீடிக்குமா? என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

காரணம் 5 மாநிலத் தேர்தல்கள் சமீபத்தில் நடைபெற்று முடிந்து இருக்கிறது. அதோடு இந்தியா முழுக்கவே தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் பல மாநிலங்களில் பொது ஊரடங்கு குறித்து ஆலோசனையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் கொரோனா பாதிப்புகளுக்கு ஒரேவழி முழு பொது ஊரடங்கை அறிவித்து சற்று இந்த எண்ணிக்கையை தணிக்கலாம் என விஞ்ஞானிகள் குழுவும், மருத்துவக் குழுவும் ஆலோசனை வழங்கி வருகிறது.

அதோடு எதிர்க்கட்சி எம்.பி.யான ராகுல் காந்தியும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் பொது ஊரடங்கை அறிவிக்கும்போது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதற்காக மத்திய அரசு வரிச்சலுகையை அறிவிக்க வேண்டும், வாழ்வாதாரத்திற்கு தேவையான நிவாரணத்தை வழங்க வேண்டும், தவணை கடன்களில் வரிச்சலுகை போன்றவற்றை அறிவிக்க வேண்டும் என அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இப்படியான வரிச்சலுகைகயை அறிவிக்கும்போது மத்திய அரசின் வருமானம் குறைந்து போகும் என்ற கவலையும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முழு பொது ஊரடங்கு கொண்டு வரப்படுமா என்பது குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி பேசிய பிரதமர் நரேந்திர மோடி பொது ஊரடங்கு என்பதை இறுதி ஆயுதமாகவே பயன்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார். ஆனால் இந்தியாவின் தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது மத்திய அரசு பொது ஊரடங்கு குறித்து விரைவில் முடிவெடுக்கும் என்றே கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

More News

தென்னிந்தியாவில் பரவிய N440K வைரஸ் 15 மடங்கு உயிரிழப்பு ஏற்படுத்தக் கூடியது… அதிர்ச்சி தகவல்!

சீனாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவத் தொடங்கியது.

ஆக்சிஜன் பற்றாக்குறை: செங்கல்பட்டு மருத்துவமனையில் 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்!

செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நேற்றிரவு 11 நோயாளிகள் உயிரிழந்ததாகப்

நாம் தமிழரின் வாக்குகள் பிற கட்சிகளின் வெற்றி தோல்வியை  தீர்மானிக்கிறதா... ஓர் அலசல்...!

பெரும்பாலும் இளைஞர்கள், அரசியல் கட்சியினரிடத்தில் பணம் வாங்காதவர்கள், சாதி மதம் பார்க்காதவர்களின் ஓட்டுக்கள் நாம் தமிழருக்கே என்ற கருத்துக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது.

சமூக செயற்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி  காலமானார்...!

சமூக செயற்பாட்டாளர்  டிராஃபிக் ராமசாமியின் உடல் கவலைக்கிடமாக  இருந்த நிலையில், அவர் காலமானதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் ஷிவானிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பரசுபாண்டியன்: அப்புறம் என்ன செய்தார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி என்பதும் அவர் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அமைதியாக இருந்த போதிலும் கடைசி நேரத்தில் நடந்த டாஸ்க் ஒன்றில்