பாகிஸ்தான் மற்றும் சீனா மீது போர்த்தொடுக்க தேதி குறிச்சாச்சு… பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்தியா போரிடும் தேதியை பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துவிட்டார் எனும் சர்ச்சைக்குரிய கருத்தை உத்திரப்பிரதேச மாநில பாஜக தலைவர் தெரிவித்து இருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் பாஜக தலைவராக செயல்பட்டு வரும் ஸ்வதந்திர தேவ் சிங் வெளியிட்ட காணொலியில் இந்தக் கருத்தை தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதில் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்தியா எப்போது போரிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாகச் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருக்கிறார். மேலும் “ராமர் கோயில் விவகாரத்தில் வெற்றி பெற்று கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது மற்றும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது ஆகியவற்றைப் போன்று பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் எப்போது போர் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே சீனாவிற்கும் இந்தியாவிற்குமான எல்லைப் பிரச்சனையில் கடும் சச்சரவுகள் இருந்துவரும் நிலையில் UP பாஜக தலைவர் இப்படி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் மீதான காழ்ப்புணர்ச்சியை மத்திய ஆளும் பாஜக கட்சி தொடர்ந்து மக்கள் மத்தியில் திணித்து வருவதாகவும் சிலர் விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments