'பாகுபலி 2' சிறப்பு காட்சியில் பிரதமர் மோடி, ராணி எலிசபெத்?
- IndiaGlitz, [Thursday,March 02 2017]
எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி, உலகமே இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்கும் வகையில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது தயாராகி வரும் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'பாகுபலி 2' படத்திற்கு முதல் பாகத்தை விட பலமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 28ஆம் தேதி உலகமெங்கும் 'பாகுபலி 2' ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் அதற்கு முன்னர் பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து ராணி எலிசபெத் உள்பட சர்வதேச பிரபலங்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டில் இந்தியாவின் 70-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்ட்டியூட் ஏப்ரல் 24 முதல் பல திரைப்படங்களை திரையிடவுள்ளது. இதில் திரையிடப்படும் படங்களில் பாகுபலி 2'ம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் உள்பட பல பிரபலங்கள் பாகுபலி 2'ம் பாகத்தை இவ்விழாவில் காணவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.