கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் 4வது வில்லன் இந்த ஹீரோவா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இதற்கு முன்பாக கமல்ஹாசன் ’பாபநாசம் 2’ படத்தில் நடிப்பார் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் மொத்தம் நான்கு வில்லன்கள் என்றும் நான்கு பேரும் பிரபலமான ஹீரோக்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன்களாக விஜய் சேதுபதி, பகத் பாசில், மற்றும் அர்ஜுன்தாஸ்ஆகிய மூவர் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நான்காவதாக நரேன் வில்லனாக நடிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘சித்திரம் பேசுதடி’ உள்பட பல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த நரேன் சமீபத்தில் ’கைதி’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு செம வில்லன்களுடன் கமலஹாசன் மோதும் இந்த படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் நடிப்பது குறித்து நரேன் கூறியபோது, ‘இந்த படத்தில் எனது கேரக்டர் மிகவும் சுவாரசியமானது என்றும் என்னுடைய கேரக்டர் படத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் கமல்ஹாசன் அவர்களுடன் நடிக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு என்றும் அந்த கனவு தற்போது நிறைவேறுவதாகவும் அவருடன் நடிக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை நான் பெற்றுள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் ’கைதி’ திரைப்படத்தை விட இந்த திரைப்படம் எனக்கு முக்கியமானது என்றும் என்னுடைய காட்சிகளின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் நடைபெற இருப்பதாக எனக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக நரேன் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப் தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout