மைக்ரோசாப்டின் சிறந்த கல்வியாளராகத் தேர்வுசெய்யப்பட்ட நம்ம ஊர் அரசு பள்ளி ஆசிரியர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் சர்வதேச அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பாக சிறந்த கல்வியாளராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியாக இருந்துவரும் கருணைதாஸ் சர்வதேச அளவில் சிறந்த கல்வியாளர் என்ற பெருமையைச் சம்பாதித்து இருக்கிறார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தகவல் தொழில்நுட்பம் மூலம் சிறந்த முறையில் கற்பிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பல இலவச மென்பொருட்களை அறிமுகம் செய்திருக்கிறது. அந்த மென்பொருட்களை ஆசிரியர்கள் எளிதாகக் கற்றுக் கொள்ளவும் தன்னுடைய மாணவர்கள் மற்றுமுள்ள ஆசிரியர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் Microsoft Education Community எனும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் உலகத்திலுள்ள மற்ற ஆசிரியர்களுடன் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் தேவையான தொழில்நுட்பங்களை வளர்த்துக் கொள்ளவும் முடியும்.
இந்தத் திட்டத்தின் மூலம் பல இலவசப் பாடத்திட்டங்களிலும் பயிற்சி வகுப்புகளிலும் கலந்துகொள்ள முடியும். மேலும் மாணவர்களுக்கு இத்திட்டத்தைப் பயன்படுத்தி மிக எளிமையான முறையில் கல்வியைக் கற்றுக் கொடுக்க முடியும். இப்படி கல்வி சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுக்கும் மைக்ரோசாப்ட் மென்பொருள் செயல்திட்டங்களைப் பயன்படுத்தி செயல்படும் சிறந்த ஆசிரியர்களை ஆண்டுதோறும் மைக்ரோசாப்ட் கௌரவிக்கவும் செய்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த மெனபொருள் கல்வியாளராக நாரணாபுரத்தைச் சேர்ந்த கருணைதாஸ் சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் கருணைதாஸ் அரசுப்பள்ளியில் பணியாற்றினாலும் தன்னுடைய வகுப்பறையில் தகவல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு எளிமையாகப் பாடங்களைக் கற்பித்து வருகிறார். கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு இத்தொழில்நுட்பம் மேலும் கைக்கொடுக்கிறது. மேலும் மைக்ரோசாப்டின் மென்பொருளைப் பயன்படுத்தி தன்னைப்போல பள்ளிகளில் பணியாற்றும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியையும் அவர் வழங்கி வருகிறார். அரசுப் பள்ளியில் பணியாற்றிக்கொண்டு திறம்பட செயல்படும் கருணைதாஸ் தற்போது சர்வதேச அளவில் மைக்ரோசாப்டின் சிறந்த கல்வியாளர்கள் என்ற பெருமையைத் தட்டிச் சென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com