மைக்ரோசாப்டின் சிறந்த கல்வியாளராகத் தேர்வுசெய்யப்பட்ட நம்ம ஊர் அரசு பள்ளி ஆசிரியர்!!!

  • IndiaGlitz, [Saturday,August 29 2020]

 

தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் சர்வதேச அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பாக சிறந்த கல்வியாளராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியாக இருந்துவரும் கருணைதாஸ் சர்வதேச அளவில் சிறந்த கல்வியாளர் என்ற பெருமையைச் சம்பாதித்து இருக்கிறார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தகவல் தொழில்நுட்பம் மூலம் சிறந்த முறையில் கற்பிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பல இலவச மென்பொருட்களை அறிமுகம் செய்திருக்கிறது. அந்த மென்பொருட்களை ஆசிரியர்கள் எளிதாகக் கற்றுக் கொள்ளவும் தன்னுடைய மாணவர்கள் மற்றுமுள்ள ஆசிரியர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் Microsoft Education Community எனும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் உலகத்திலுள்ள மற்ற ஆசிரியர்களுடன் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் தேவையான தொழில்நுட்பங்களை வளர்த்துக் கொள்ளவும் முடியும்.

இந்தத் திட்டத்தின் மூலம் பல இலவசப் பாடத்திட்டங்களிலும் பயிற்சி வகுப்புகளிலும் கலந்துகொள்ள முடியும். மேலும் மாணவர்களுக்கு இத்திட்டத்தைப் பயன்படுத்தி மிக எளிமையான முறையில் கல்வியைக் கற்றுக் கொடுக்க முடியும். இப்படி கல்வி சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுக்கும் மைக்ரோசாப்ட் மென்பொருள் செயல்திட்டங்களைப் பயன்படுத்தி செயல்படும் சிறந்த ஆசிரியர்களை ஆண்டுதோறும் மைக்ரோசாப்ட் கௌரவிக்கவும் செய்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த மெனபொருள் கல்வியாளராக நாரணாபுரத்தைச் சேர்ந்த கருணைதாஸ் சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் கருணைதாஸ் அரசுப்பள்ளியில் பணியாற்றினாலும் தன்னுடைய வகுப்பறையில் தகவல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு எளிமையாகப் பாடங்களைக் கற்பித்து வருகிறார். கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு இத்தொழில்நுட்பம் மேலும் கைக்கொடுக்கிறது. மேலும் மைக்ரோசாப்டின் மென்பொருளைப் பயன்படுத்தி தன்னைப்போல பள்ளிகளில் பணியாற்றும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியையும் அவர் வழங்கி வருகிறார். அரசுப் பள்ளியில் பணியாற்றிக்கொண்டு திறம்பட செயல்படும் கருணைதாஸ் தற்போது சர்வதேச அளவில் மைக்ரோசாப்டின் சிறந்த கல்வியாளர்கள் என்ற பெருமையைத் தட்டிச் சென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

டிரைவராக மாறி 71 வயது கொரோனா நோயாளியைக் காப்பாற்றிய மருத்துவர்!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

கொரோனா பரவல் கட்டத்தில் மருத்துவர்கள் தங்களுடைய நிலையைக்கூட பொருட்படுத்தாமல் மற்றவர்களுக்காக சகிப்பு தன்மையுடன் பணியாற்றுவதைப் பல நேரங்களில் பார்க்க முடிகிறது.

140 பேரில் டிவி பிரமுகரும் ஒருவரா? 25 வயது இளம்பெண் கொடுத்த பாலியல் புகாரால் பரபரப்பு!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயது பெண் தன்னை 140பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சமீபத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா தாக்கிய குழந்தையா? பெற்றோர்களே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்…

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கொரோனா பாதித்த 7 வயது சிறுவனுக்கு ஹைப்பர் இன்பிலேமட்டரி சின்ரோம் என்ற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

எனது தந்தை கொரோனாவால் மரணம் அடையவில்லை: நடிகர் விஜய் வசந்த் பேட்டி

கன்னியாகுமாரி காங்கிரஸ் எம்பியும், பிரபல தொழிலதிபரும் நடிகர் விஜய் வசந்தின் தந்தையுமான வசந்தகுமார் நேற்று மாலை மரணம் அடைந்தார் என்ற செய்தி தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 

வசந்தகுமார் மறைவுக்கு கமல், ரஜினி, பிரபு இரங்கல்!

பிரபல தொழிலதிபரும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பியுமான வசந்தகுமார் நேற்று மாலை மறைவடைந்த நிலையில் அவரது மறைவிற்கு