சமந்தாவின் அடுத்த படத்தில் மிஷ்கின் பட நாயகன்

  • IndiaGlitz, [Friday,March 23 2018]

திருமணத்திற்கு பின்னரும் பிசியாக கோலிவுட் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா , சமீபத்தில் ஒரே நேரத்தில் 'இரும்புத்திரை', 'சீமராஜா மற்றும் ஒரு தெலுங்கு படம் என மூன்று படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். இதனையடுத்து தனது கணவருடன் ஓய்வு எடுக்க சமந்தா மியாமிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் சமந்தா நடிக்கவுள்ள அடுத்த படமான 'யூடர்ன்' தமிழ் ரீமேக் திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டன . முதலில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு குறித்த ஆலோசனையில் இயக்குனர் பவன்குமார் உள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க மிஷ்கினின் 'சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களின் நாயகன் நரேன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் பூமிகா நடிக்கவுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் ராகுல் ரவீந்திரன், ஆதி நடிக்கவுள்ளனர் என்பது தெரிந்ததே.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

500 நாளில் ஒருநாள் கூட விஜய் தவறியதில்லை: இயக்குனர் பரதன்

பரதன் இயக்கத்தில் விஜய் 'அழகிய தமிழ்மகன்' மற்றும் பைரவா' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதுபோல் விஜய் நடித்த 'கில்லி' மற்றும் 'மதுர' ஆகிய படங்களுக்கு பரதன் வசனம் எழுதியுள்ளார்

போயஸ் கார்டனில் தினேஷ் கார்த்திக்-தீபிகாவின் கனவு இல்லம்

தினேஷ் கார்த்திக் சமீபத்தில் இலங்கையில் நடந்த மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்தியாவின் ஹீரோவாக மாறினார்.

பெண் வேட புகைப்படம் குறித்து அனிருத் தரப்பின் விளக்கம்

இணையதளங்களில் இளம் இசைப்புயல் அனிருத்தின் பெண் வேட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' படத்தில்தான் அனிருத் பெண் வேடத்தில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

திரையரங்க வேலைநிறுத்தம் திடீர் வாபஸ்: நாளை முதல் இயங்கும் என அறிவிப்பு

சென்னை தவிர தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள் கடந்த 16-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்து வந்ததால் திரையங்குகள் இயங்கவில்லை.

இது இயலாமை அல்ல; இழிவான அரசியல்: மத்திய அரசை போட்டுத்தாக்கும் கமல்

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை அமைப்பதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு சுணக்கம் காட்டி வருவது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்து வருகின்றன