'நரகாசுரன்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
முதல்படமான 'துருவங்கள் 16' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகை வியக்க வைத்தவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். இவர் இயக்கிய இரண்டாவது படமான 'நரகாசுரன்' கடந்த சில மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆனால் தயாரிப்பாளர் கவுதம் மேனனுக்கும் இயக்குனர் கார்த்திக் நரேனுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடங்கின.
இந்த நிலையில் இருதரப்பின் சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்னர் கவுதம் மேனன் இந்த படத்தில் இருந்து விலகி கொள்ள தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. சமீபத்தில் சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்ற இந்த படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
110 நிமிடங்கள் மட்டுமே ரன்னிங் டைம் உள்ள இந்த திரில் படத்தில் அரவிந்தசாமி, இந்திரஜித், ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷான் ஆத்மிகா உள்பட பலர் நடித்துள்ளனர். ரான் எதான் யோஹன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு. சுஜித் சரங் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
Official trailer of #Naragasooran will be released on August 1. 'The characters & conflicts'. Excited :) pic.twitter.com/YpiMhwMsV3
— Karthick Naren (@karthicknaren_M) July 23, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments