கார்த்திக் நரேனின் 'நரகாசுரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,August 01 2018]

கார்த்திக் நரேன் இயக்கிய 'துருவங்கள் 16' படத்திற்கு பின்னர் அவர் இயக்கிய 'நரகாசுரன்' திரைப்படம் சமீபத்தில் சென்சார் சென்று 'யூஏ' சான்றிதழ் பெற்ற நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னையில் நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின்போது இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நாயகன் அரவிந்தசாமி, இதுவொரு முழுக்க முழுக்க கார்த்திக் நரேன் படம் என்றும், இந்த அளவில் அவருக்கு இருக்கும் மேக்கிங் திறமை மற்றும் மெச்சூரிட்டியை பார்த்து வியந்ததாகவும் கூறினார்.

அரவிந்தசாமி, ஸ்ரேயா சரண், இந்திரஜித், சந்தீப் கிஷான் ஆத்மிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரான் எதான் யோஹன் இசையமைத்துள்ளார். சுஜித் சரங் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படம் கார்த்திக் நரேனின் முதல் படம் போலவே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.