'நரகாசுரன்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

  • IndiaGlitz, [Thursday,July 19 2018]

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்தசாமி நடித்த 'நரகாசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது. இதனிடையே இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் மற்றும் தயாரிப்பாளர் கவுதம் மேனன் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருவதாக கூறப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டதை அடுத்து இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 110 நிமிடங்கள் அதாவது ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அரவிந்தசாமி, இந்திரஜித், ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷான் ஆத்மிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரான் எதான் யோஹன் இசையமைத்துள்ளார். சுஜித் சரங் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படம் கார்த்திக் நரேனின் முதல் படம் போலவே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஸ்ரீதேவி கேரக்டரில் நடிக்கும் சூர்யா-கார்த்தி பட நாயகி

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே மற்றும் கார்த்தி நடிப்பில் ரஜத் ரவிசங்கர் இயக்கி வரும் படம் ஒன்றிலும் நடித்து வருபவர் நடிகை ரகுல் ப்ரித்திசிங்.

40 வருடங்களுக்கு பின் ரீமிக்ஸ் ஆகும் கமல் பட பாடல்

ஸ்ரீப்ரியா தயாரித்து நடித்த இச்சாதாரி பாம்பு படமான 'நீயா' படம் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது

கால்பந்து விளையாட்டு வீரரின் படத்தில் விஜய்சேதுபதி

சமீபத்தில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து முடிந்து அதில் பிரான்ஸ் நாடு கோப்பையையும் வென்றது என்பது அனைவரும் அறிந்ததே.

நீட் வினாத்தாள் தமிழ் மொழிபெயர்ப்பு தவறுக்கு தமிழக அரசே காரணம்: சி.பி.எஸ்.இ

சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாளின் தமிழ் பதிப்பில் மொழிபெயர்ப்பு தவறுகள் இருந்ததாகவும், இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும்

சிஸ்டம் சரியில்லை என்ற சொன்ன ரஜினியின் கருத்து மாறியது ஏன்? அமைச்சர் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் அரசியலில் குதிக்க உள்ளதாக உறுதி செய்தபின்னர் 'ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்து அரசியல் கட்சி தொடங்க அடித்தளம் அமைத்து வருகிறார்