close
Choose your channels

கார்த்திக் நரேனின் 'நரகாசூரன்' டீசர் விமர்சனம்

Saturday, November 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'துருவங்கள் 16' படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் கவனத்தை தனது பக்கம் திருப்பிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் இரண்டாவது படம் தான் 'நரகாசூரன்'. இந்த முறை அரவிந்தசாமி, சந்தீப் கிஷான், ஸ்ரேயா போன்ற பிரபல நட்சத்திரங்களுடன் களமிறங்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் சற்றுமுன்னர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

டீசரின் முதல் லாங் ஷாட்டில் ஒரு கார் இயற்கை எழில் கொஞ்சும், அதே நேரத்தில் ஆபத்தான பாதையில் செல்வது போன்ற காட்சியே படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றது. அரவிந்தசாமி, ஸ்ரேயா ஆகியோர்களின் முகபாவனைகளில் இருந்தே அவர்கள் ஏதோ பிரச்சனையில் மாட்டியிருப்பது போன்றும் அதில் இருந்து அவர்கள் விடுபட முடியாமல் தவிப்பதும் தெரிகிறது.

கும்மிருட்டு, மழை, அடர்ந்த காட்டில் கொட்டும் மழையில் அரவிந்தசாமியின் தேடல், போலீஸ் உதவி, என டீசரின் காட்சிகளும் அதற்கு பொருத்தமான பின்னணி இசையும் படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்துகிறது. இறுதியில் ஒரு பேயின் வீழ்ந்த கதை என்ற டைட்டில் இந்த படம் ஒரு பேய்ப்படம் என்பதை மட்டும் தெளிவுபடுத்துகிறது.

ஒரு அறிமுக இயக்குனருக்கு இரண்டாவது படம் என்பது ஒரு அக்னிப்பரிட்சை. அதில் அவர் தேறிவிட்டால் அவரது அடுத்த பயணம் மிக எளிதாக இருக்கும். இந்த பரிட்சையில் கார்த்திக் நரேன் தேறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment