ரூ.11 லட்சம் அபராதம்… பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து நவோமி ஒசாகா திடீர் விலகல்!

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா தற்போது நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து திடீரென விலகி இருக்கிறார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளாததால் அவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக நவோமி ஒசாகா பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையுமான நவோமி தற்போது பாரீசில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் சுற்றில் 6-4,7-6,(7-4) என்ற நேர்செட்டில் ரூமேனியா வீராங்கனை மரியா டிக்கை வீழ்த்தி 2 ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

அதற்குப் பின்பு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நவோமி ஒசாகா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதனால் போட்டி விதிமுறைகளை நவோமி மதிக்கவில்லை எனக் கூறி போட்டிக் குழுவினர் ரூ.11 லட்சம் அபராதம் விதித்து உள்ளனர். அதோடு பிரெஞ்ச் ஓபன் சமூக வலைத்தளங்களில் ஒசாகாவின் தவறைச் சுட்டிக்காட்டும் விதமாக ரபெல் நடால், நிஷிகோரி, சபலென்கா, கோகோ காப் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்திப்பது போல் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு உள்ளனர்.

மேலும் அவர்கள் தங்கள் பணியை புரிந்து செயல்படுகிறார்கள் என்று பதிவிட்டு இருந்தனர். இந்த செய்கைக்கு முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்தப் பதிவுகள் அனைத்தும் உடனடியாக நீக்கப்பட்டது. இந்நிலையில் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக நவோமி ஒசாகா திடீர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து, “போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களுக்கு நான் கவனச்சிதறலாக இருந்து விடக்கூடாது என்பதற்காக போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். உண்மை என்னவென்றால் 2018 ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் போட்டியில் இருந்து நான் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். சமாளிக்க எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. என்னை அறிந்த எல்லோருக்கும் நான் திடமான சிந்தனை உடையவர் என்பது தெரியும்” என்று நவோமி தனது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தப்புல சின்னத்தப்பு, பெரிய தப்பெல்லாம் கிடையாது: ஜகமே தந்திரம் டிரைலர்

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது

5ஜி சேவையை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ரஜினி பட நடிகை!

இந்தியாவில் 5ஜி சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் ரஜினி படத்தில் நடித்த நடிகை ஒருவர் வழக்குத் தொடர்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஊரடங்கால் காணாமல் போன பாக்டீரியா… ஆச்சர்யத் தகவல்!

கொரோனா நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர்.

தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் விசாரணை!

கடந்த சில மாதங்களாக திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது சர்வ சாதாரணம் ஆகி வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட உடன் காவல்துறையினர்

ஓடிடியில் ரிலீஸாகும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திரைப்படம்?

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் திரைப்படம் ஒன்று ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன