ரூ.11 லட்சம் அபராதம்… பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து நவோமி ஒசாகா திடீர் விலகல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா தற்போது நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து திடீரென விலகி இருக்கிறார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளாததால் அவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக நவோமி ஒசாகா பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.
4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையுமான நவோமி தற்போது பாரீசில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் சுற்றில் 6-4,7-6,(7-4) என்ற நேர்செட்டில் ரூமேனியா வீராங்கனை மரியா டிக்கை வீழ்த்தி 2 ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
அதற்குப் பின்பு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நவோமி ஒசாகா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதனால் போட்டி விதிமுறைகளை நவோமி மதிக்கவில்லை எனக் கூறி போட்டிக் குழுவினர் ரூ.11 லட்சம் அபராதம் விதித்து உள்ளனர். அதோடு பிரெஞ்ச் ஓபன் சமூக வலைத்தளங்களில் ஒசாகாவின் தவறைச் சுட்டிக்காட்டும் விதமாக ரபெல் நடால், நிஷிகோரி, சபலென்கா, கோகோ காப் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்திப்பது போல் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு உள்ளனர்.
மேலும் அவர்கள் தங்கள் பணியை புரிந்து செயல்படுகிறார்கள் என்று பதிவிட்டு இருந்தனர். இந்த செய்கைக்கு முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்தப் பதிவுகள் அனைத்தும் உடனடியாக நீக்கப்பட்டது. இந்நிலையில் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக நவோமி ஒசாகா திடீர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து, “போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களுக்கு நான் கவனச்சிதறலாக இருந்து விடக்கூடாது என்பதற்காக போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். உண்மை என்னவென்றால் 2018 ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் போட்டியில் இருந்து நான் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். சமாளிக்க எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. என்னை அறிந்த எல்லோருக்கும் நான் திடமான சிந்தனை உடையவர் என்பது தெரியும்” என்று நவோமி தனது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com