இந்திய அளவில் ட்ரெண்டாகி வரும் #நான்தான்பாரஜினிகாந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை ரஜினி சந்தித்தபோது, காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒரு வாலிபர் 'நீங்க யாரு' என்று கேட்க அதற்கு ரஜினி 'நான் தான் ரஜினிகாந்த் என்று கூறினார். அதன்பின்னர் ரஜினி சிரித்து கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.
இந்த நிலையில் ரஜினி அந்த இளைஞரிடம் கூறியதை வைத்து 'நான்தாப்பாரஜினிகாந்த்' என்ற ஹேஷ்டாக் தற்போது டுவிட்டரில் அகில இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. நெட்டிசன்கள் ரஜினிகாந்த் குறித்து பல மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். ரஜினி எதிர்ப்பாளர்களும் இந்த விஷயத்தை பெரிதாக்கி வருகின்றனர்.
தூத்துகுடிக்கு இதுவரை சென்ற அரசியல்வாதிகளுக்கு கிடைக்காத மிகப்பெரிய கூட்டம், வரவேற்பு ஆகியவை ரஜினிக்கு கிடைத்தது. இருப்பினும் ஒரே ஒரு வாலிபர் கேட்ட 'யாரு நீங்க' என்ற கேள்வி மட்டும் சமூக வலைத்தளத்தில் பெரிதுபடுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.' யாரு நீங்க' என்று அந்த வாலிபர் ரஜினியிடம் கேட்ட கேள்விக்கு மக்கள் வரும் தேர்தலில் பதிலளிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout