பிரபல நடிகருடன் இணைந்து செயல்பட நாஞ்சில் சம்பத் முடிவு


Send us your feedback to audioarticles@vaarta.com


அரசியலில் அவ்வப்போது பெரும் பரபரப்புகளை ஏற்படுத்தி வருபவர் நாஞ்சில் சம்பத் என்பது தெரிந்ததே. தினகரன் அணிக்கு தீவிரமாக ஆதரவு கொடுத்து கொண்டிருந்த அவர், தினகரன் புதுக்கட்சி ஆரம்பித்த்தால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அந்த அணியில் இருந்து வெளியே வந்தார். வேறு கட்சியில் சேரப்போவதில்லை என்றும், இனி அரசியலில் இருந்து விலகி தமிழுக்கு சேவை செய்ய போவதாகவும் நாஞ்சில் சம்பத் கூறியிருந்தார்
இந்த நிலையில் சமீபத்தில் அரசியலுக்கு வரவுள்ளதாக கூறப்படும் ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து செயல்படவுள்ளதாக நாஞ்சில் சம்பத் திடீரென அறிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத் கூறியதாவது:
'சிறிதுகாலம் அனைத்தில் இருந்தும் விலகியிருந்த நான், அருமைத்தம்பி ஆர்ஜே பாலாஜியின் புதிய பயணத்தால் ஈர்க்கப்பட்டு, அவருடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். புத்தம் புது இளைஞர் ஒருவருடன் கைகோர்த்து ஆவலுடன் பணியாற்ற காத்திருக்கின்றேன்' என்று அவர் கூறியுள்ளார்.
ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து அரசியல் பணியாற்ற போகின்றாரா? அல்லது ஆர்ஜே பாலாஜி நடிக்கும் திரைப்படத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்க போகின்றாரா? அல்லது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொள்ளப்போகின்றார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments