இரண்டே நாளில் உடைந்தது தினகரனின் 'அமமுக?
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுகவில் இருந்து தனி அணியாக செயல்பட்டு வந்த டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தனக்கென தனி அமைப்பு வேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பித்த அரசியல் அமைப்புதான் 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்'. இந்த அமைப்பின் தொடக்கவிழா இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரையில் பிரமாண்டமாக நடந்தது
இந்த நிலையில் கட்சி ஆரம்பித்த இரண்டே நாளில் அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக தினகரனின் நெருங்கிய ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். சற்றுமுன் செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் எனக்கு உடன்பாடில்லை. அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி கட்சி நடத்த டிடிவி நம்புகிறார். அவருடைய நம்பிக்கை வெற்றிபெற வாழ்த்துக்கள் நான் இனிமேல் அதில் இல்லை' என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த அரசியல் அமைப்பால் தினகரனின் வேறு சில தினகரன் ஆதரவாளர்களும் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்களும் விரைவில் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com