முதல்வர் தனது பியூனுக்கு மட்டுமே கட்டளையிட முடியும். நாஞ்சில் சம்பத்

  • IndiaGlitz, [Monday,June 05 2017]

இரட்டை இலையை கையகப்படுத்த லஞ்சம் கொடுக்க முயற்சித்தாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்த டிடிவி தினகரன், சமீபத்தில் ஜாமீன் பெற்று சென்னை திரும்பியுள்ளார். மீண்டும் கட்சிப்பணியை தொடங்கவுள்ளதாக தினகரன் கூறிய நிலையில் டிடிவி தினகரனை கட்சிப்பணி ஆற்ற அனுமதிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவெடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தினகரனின் தீவிர ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், 'தினகரன் கட்சிப்பணியாற்ற முதல்வர் முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. முதலமைச்சர் பழனிச்சாமியால் தம்மிடம் பணிபுரியும் பியூனுக்கு தான் கட்டளையிட முடியுமே தவிர, டிடிவி தினகரனுக்கு கட்டளையிட முடியாது' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே சசிகலா அணி, ஓபிஎஸ் அணி அதிமுக இரண்டாக பிரிந்திருக்கும் நிலையில் தற்போது அதிமுக அம்மா அணியில் முதல்வர் பழனிச்சாமி அணி, தினகரன் அணி என இரண்டாக உடையும் வாய்ப்பு உள்ளதாக அரசியக் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இப்படியே போனால் எம்.ஜி.ஆரால் ஆரம்பித்து ஜெயலலிதாவால் கட்டிக்காத்த, அதிமுக சிதறுதேங்காய் போல் சின்னபின்னாமாகிவிட வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.