close
Choose your channels

அரசியல் என்ன சிறுபிள்ளை விளையாட்டா? ரஜினியெல்லாம் வரமுடியாது: நாஞ்சில் சம்பத்

Tuesday, December 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைய ரசிகர்களின் சந்திப்பின்போது வரும் 31ஆம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவிருப்பதாக கூறியுள்ளார்.

இந்த நிலைப்பாடு ரஜினி அரசியலுக்கு வருவதை உறுதி செய்வதாக இருக்கும் என்று ரஜினி ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அரசியல்வாதிகள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று மேம்போக்காக கூறினாலும், அவர் வந்துவிடக்கூடாது என்றே அவர்கள் விரும்புவதாக தெரிகிறது.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு வரும் 31ஆம் தேதி எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், 'ரஜினி அரசியலுக்கெல்லாம் வரமாட்டார். வரவும் முடியாது. வரும் 31ஆம் தேதி நீங்கள் எல்லாம் ஏமாற போகிறீர்கள்

அரசியல் என்பது என்ன சிறுபிள்ளைகள் மணல்வீடு கட்டி விளையாடும் விளையாட்டா? ரத்தமும் சதையும் காணிக்கை தர வேண்டும். எனவே ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment