'என்ன ஆனாலும் சரி, மொத்த பேரையும் கொத்தா தூக்கிருவேன்': நானி, கீர்த்தி சுரேஷின் 'தசரா' டீசர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘தசரா’ என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகும் இந்த படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்து உள்ளது என்றுதான் கூறவேண்டும். இருப்பினும் இந்த டீசரில் கீர்த்தி சுரேஷின் காட்சிகள் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.
சந்தோஷ் நாராயணன் இசையில் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் நவீன் நூலி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் கதையம்சம் கொண்டது என்பதும் நானி ஆக்சனில் பட்டையை கிளப்பியிருப்பதால் நிச்சயம் ஆக்சன் பிரியர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சினை, அந்த பிரச்சனையால் ஏற்படும் விளைவு தான் இந்த படத்தின் கதை என தெரிகிறது. மொத்தத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை திருப்தி செய்யும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#DASARA T-R-A-I-L-E-R
— Nani (@NameisNani) March 14, 2023
Nee Yavvaa .. 🪓♥️https://t.co/UXWGlnRq6i
March 30th 🔥#EtlayitheGatlayeSuskundham #DasaraTrailer pic.twitter.com/Be8LlJtnMg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments