நடிகை பிரியங்கா மோகனுக்கு பட்டம் வழங்கிய நானி.. என்ன பட்டம் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,August 19 2024]

நானி, பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்த ’சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்த போது நானி, பிரியங்காவுக்கு பட்டம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகின் நேச்சுரல் ஸ்டார் என்று அழைக்கப்படும் நானி முக்கிய வேடத்தில் நடித்துள்ள ’சனிபோதா சனிவாரம்’ என்ற படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வரும் 29ஆம் தேதி வெளியாகியுள்ளது.

சென்னையில் இந்த படத்தின் அறிமுக விழா நேற்று நடந்த நிலையில் இதில் நானி, பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நானி பேசியபோது, ’ஒவ்வொரு முறை தமிழகத்துக்கு வரும்போது தமிழ் மக்களின் அன்பை வியந்து பார்க்கிறேன், சென்னைக்கு வரும்போது எல்லாம் ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு என்னை பிரமிக்க வைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் நேச்சுரலாக நடித்துள்ளார் என்றும் அவருக்கு எனது நேச்சுரல் ஸ்டார் என்ற பட்டத்தை நான் அளிக்கிறேன் என்றும் கூறியவுடன் பிரியங்கா மோகன் வெட்கத்தால் தலை குனிந்தார்.

மேலும் இந்த படத்தில் நான் செகண்ட் ஹீரோ தான், இந்த படத்தின் உண்மையான ஹீரோ எஸ்ஜே சூர்யா தான் என்றும் அவர் திரையில் தோன்றும் போதெல்லாம் உற்சாகமாக இருக்கும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

More News

சீரியல் நடிகைக்கு 2வது திருமணம்.. கேரள தொழிலதிபரை கரம் பிடித்தார்..!

தமிழ் டிவி சீரியல்களிலும் சில படங்களிலும் நடித்துள்ள நடிகை, கேரள தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தவெக கட்சி கொடியை அறிமுகம் செய்கிறார் விஜய்... தேதி இதுதான்..!

தமிழக வெற்றி கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்யும் தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ், அட்லியை அடுத்து பாலிவுட் செல்லும் லோகேஷ் கனகராஜ்.. ஹீரோ இந்த பிரபலமா?

தமிழ் திரை உலகை சேர்ந்த பிரபல இயக்குனர்கள் பாலிவுட்டில் வெற்றி படங்களை இயக்கி வரும் நிலையில் அடுத்த கட்டமாக லோகேஷ் கனகராஜ் பாலிவுட் திரையுலகின் முன்னணி 

ரஜினியின் ‘வேட்டையன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கலா?

ஏற்கனவே அக்டோபர் 10ஆம் தேதி சூர்யாவின் ’கங்குவா’  திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே நாள்களில் ‘வேட்டையன்’

குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 : துலாம் முதல் மீனம் வரை ! - ஆச்சார்யா ஹரிஷ் ராமன்

பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், அக்டோபர் 10 முதல் 2025 பிப்ரவரி 4 வரை நடைபெற உள்ள குரு வ