நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: அரசியல் கட்சிகளின் ரியாக்சன்
Send us your feedback to audioarticles@vaarta.com
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என சற்றுமுன் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 23ஆம் தேதி திங்கள் கிழமை வேட்புமனு தாக்கல் துவக்கம் என்றும், அக்டோபர் 21 இல் வாக்குப்பதிவு என்றும், அக்டோபர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து தமிழக அரசியல் கட்சிகளின் ரியாக்சன்களை பார்ப்போம்
தேர்தல் அறிவிப்பை அடுத்து அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு என திமுக தலைமை அறிவித்துள்ளது. மேலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ் தலைவர்கள் அண்ணா அறிவாலயம் வருகை!
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என்றும், ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி, 23-ஆம் தேதிக்குள் விருப்பமனுக்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்றும், அமமுகவுக்கு நிரந்தரமாக தனி சின்னம் கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியில்லை என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் அளிக்கப்படும் வாக்கு திமுகவா? அதிமுகவா? என்பதை முடிவு செய்வதற்கல்ல , தமிழ்நாட்டில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா? வேண்டாமா ? என்பதற்கானது என ரவிகுமார் எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments