சண்டைக்காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்த பிரபல நடிகை

  • IndiaGlitz, [Sunday,August 05 2018]

கோலிவுட் திரையுலகில் தற்போது நடிகைகள் ரிலிஸ் எடுத்து ஆக்சன் காட்சிகளில் நடிப்பது அதிகரித்து வருகிறது. அழகு பதுமையாகவும், பாடல் காட்சிகளுக்கு நடனமாடும் காட்சிகளில் மட்டும் நடித்து வந்த நடிகைகள் தற்போது ஆக்சன் காட்சிகளிலும் நடித்து வருவதும் அதற்கான பயிற்சிகளில் ஈடுபடுவதும் ஒரு முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

'சீமராஜா' படத்தில் நடிகை சமந்தா சிலம்பாட்ட மாஸ்டராக நடித்துள்ளார் என்பதும், 'மோகினி' படத்தில் த்ரிஷாவும், 'இமைக்கா நொடிகள்' படத்தில் நயன்தாராவும் ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தெலுங்கு படமான 'ஸ்ரீனிவாச கல்யாணம்' என்ற படத்தில் நடிகை நந்திதா ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் டூப் இன்றி நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்., நிதின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நந்திதா, பத்மாவதி என்ற கிராமத்து பெண் கேராக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 'சதுரங்க வேட்டை' தெலுங்கு ரீமேக் மற்றும் 'டார்லிங் 2' தெலுங்கு ரீமேக் ஆகியவைகளில் நடித்து வரும் நந்திதா, தமிழில் 'நர்மதா' என்ற படத்தில் வைபவுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

நெல்லை அருவியில் குதூகலமாக குளித்த தல: ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு

கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் 'தல' என்று அழைக்கப்படும் தோனி, நேற்று மதுரை-கோவை இடையே நெல்லை மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியை டாஸ் போட்டு தொடங்கி வைத்தார்.

ரஜினி படத்தை இரண்டு முறை மிஸ் செய்த விஜய்சேதுபதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே

வரலட்சுமியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

, audio and Trailer From today. #EcharikkaiFromAug24

சுசீந்திரன் இயக்கும் 'ஜீனியஸ்' பட இசையமைப்பாளர் அறிவிப்பு

பிரபல இயக்குனர் சுசீந்திரன் தற்போது 'ஜீனியஸ்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்த பின்னர் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்?

'சர்கார்' படத்தில் இணையும் 'ஆளப்போறான் தமிழன்' கூட்டணி

விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில்  ஒரு பாடல் காட்சி உள்பட ஒருசில காட்சிகளை படமாக்க படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளனர்.