இந்தியன் தண்டனை சட்டத்தின் டைட்டிலில் நந்திதாவின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Wednesday,March 06 2019]

தமிழ் திரையுலகில் நயன்தாரா மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகள் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வரும் நிலையில் தற்போது அதே பாணியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் நந்திதா ஸ்வேதா. பா.ரஞ்சித் இயக்கிய 'அட்டக்கத்தி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன்பின்னர் எதிர்நீச்சல், 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'முண்டாசுப்பட்டி, புலி உள்பட பல திரைப்படங்களில் நடித்த நந்திதாவின் அடுத்த பட டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

நந்திதாவின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தின் டைட்டில் 'ஐபிசி 376'. இந்திய தண்டனைச்சட்டம் 376 பிரிவு என்பது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் பிரிவு என்பதால் இந்த படத்தின் கதையும் பெண்களுக்கு எதிரான குற்றம் குறித்த கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கில் நந்திதா இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் தோற்றமளிக்கின்றார்.

பவர்கிங் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் எஸ்.பிரபாகர் தயாரிக்கும் இந்த படத்தை ராம்குமார் சுப்பராமன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை சற்றுமுன் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தல அஜித்துடன் 'விஸ்வாசம்' என்ற சூப்பர் ஹிட் படத்துடன் இந்த ஆண்டை தொடங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகவுள்ளது

நீங்கள் முதலில் நடிப்பதை நிறுத்துங்கள்: பிரபல நடிகரை சீண்டிய எச்.ராஜா!

சமீபத்தில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகத்துக்கு உரிய கேள்விகளை முன்வைத்த போது, 'நாம் ராணுவத்தினரை

ஜிவி பிரகாஷின் 'வாட்ச்மேன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர். இவரது நடிப்பில் சமீபத்தில் 'சர்வம் தாளமயம்' வெளியாகி

வீட்டுக்கு வாங்க, உங்களை கொலை செய்றேன்: அக்சயகுமாரை மிரட்டிய மனைவி

பிரபல நடிகர், நடிகைகளின் பார்வை தற்போது டிஜிட்டல் மார்க்கெட் பக்கம் போய் கொண்டிருக்கின்றது என்பது தெரிந்ததே.

ஜிவி பிரகாஷின் 'குப்பத்து ராஜா' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜிபி பிரகாஷ் நடித்த 'சர்வம் தாளமயம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள '100% காதல்' மற்றும் 'வாட்ச்மேன்' ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது